எங்களைக் குறித்து

நாங்கள் ஒரு சிறிய கிறிஸ்தவ சபையாக இருக்கிறோம். எங்கள் சபைக்கு தேவ வார்த்தை மட்டுமே அடிப்படையாய் இருக்கிறது. எங்கள் நோக்கம்: இந்த முன்சன் பட்டணத்தில், உலகத்திற்கு ஒளியாயிருப்பது (மத்தேயு 5;14). நாங்கள் ஒவ்வொரு வாரமும் கிறிஸ்துவுக்குள் ஐக்கியப்பட்டு, தேவனை ஆராதித்து, அவருடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து, அவருடைய வார்த்தையை கேட்டு வருகிறோம்.

எங்கள் வாஞ்சை:

  • இந்த ஐக்கியத்திற்கூடாக கிறிஸ்துவுக்குள் நாம் வளர விரும்புகிறோம்.
  • அவருடைய சாயலை நாளுக்கு நாள் இன்னும் கூட அடைய விரும்புகிறோம்.
  • அவர் பரிசுத்த ஆவியானவருக்கூடாக தரும் வல்லமையால் அவரை மகிமைப்படுத்தி வாழ விரும்புகிறோம்.

இந்த இலக்கை அடைய விரும்புகிற ஒவ்வொரு நபரைக்குறித்தும் நாங்கள் சந்தோஷப்படுகிறோம். இந்த சபைக்கு வருபவர்கள் தமிழ் மக்கள் என்பதனால் நாங்கள் தேவனை தமிழ் மொழியில் ஆராதிக்கிறோம். செய்தி ஜேர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப்படும்.